மதிமுக கொ.ப. செயலாளர் நாஞ்சில் சம்பத் கைது!

பிரிவினையைத் தூண்டியதாகக் கூறி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை கைது செய்து சிறையில் அடைத்திருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து நாகர்கோயிலில் இன்று ஆர்ப்பாட்டம் செய்த அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.

இலங்கையில் தமிழர்களை அந்நாட்டு இராணுவத்தினர் கொல்வதைக் கண்டித்து மதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில், இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையிலும் பேசியதாகக் கூறி வைகோவையும், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் மு. கண்ணப்பனையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வைகோவையும், கண்ணப்பனையும் கைது செய்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து நாகர்கோயிலில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களைக் காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்