நத்தத்தில் 23 செ.மீ மழை!
வெள்ளி, 24 அக்டோபர் 2008 (16:15 IST)
தமிழகத்தில் நேற்று பல பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 23 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அடுத்ததாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் 16 செ.மீ மழை பெய்துள்ளது. உதகமண்டலத்தில் 15 செ.மீ மழையும், நீலகிரி மாவட்டம் கிட்டி, மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி ஆகிய இடங்களில் தலா 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சோழவந்தானில் 11 செ.மீ மழையும், திருப்பத்தூர், நிலக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ மழையும், திருப்புவனத்தில் 9 செ.மீ மழையும், கோவில்பட்டி, குன்னூர், தாத்திங்கார்பேட்டை, மதுரை மாவட்டம் சிட்டாம்பட்டி, மேலூர், உசிலம்பட்டி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ மழையும், ஆதிராம்பட்டினம், கன்னியாகுமரி, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஆண்டிப்பட்டி, சிவங்கை ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை பெய்துள்ளது. திருவாரூர ் மாவட்டம் மேட்டுப்பட்டி, வலங்கைமான், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி, குழித்துறை, நாகர்கோவில், அன்னூர், சின்னக்கல்லார், அவிநாசி, பெரியகுளம், பழனி ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தாம்பரம ், தஞ்சாவூர், நீடாமங்கலம், திருத்துறைபூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம், அறங்தாங்கி, கிரனூர், புதுக்கோட்டை, மணல்மேல்குடி, ஆர்.எஸ்.மங்கலம், பாளையங்கோட்டை, மயிலாடி, தக்கலை, பெரியநாயக்கன்பாளையம், நீலகிரி மாவட்டம் குண்டாபாலம், மதுரை மாவட்டம் பெரையூர், திருமங்கலம், உத்தமபாளையம், மானாமதுரை ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழை பெய்துள்ளது. கும்பகோணம ், புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி, தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை, கோயம்புத்தூர், வால்பாறை, பவானிசாகர், கோபிசெட்டிப்பாளையம், மணப்பாறை, மருங்காபுரி, பெரியாறு அணை, சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்ன ை விமான நிலையம், காரைக்கால், ஒரத்தநாடு, பாபநாசம், திருவிடைமருதூர், கொடவாசல், நன்னிலம், கந்தார்வகோட்டை, விராலிமலை, தேவாளை, பேச்சிப்பாறை, கோவை விமான நிலையம், உடுமலைபேட்டை, தாராபுரம், கூடலூர் பஜார், நடுவட்டம், கடவூர், காரைக்குடி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், கொடைக்கானல், வேடச்சந்தூர் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பெய்துள்ளது.
செயலியில் பார்க்க x