இது பற்றி தகவல் அறிந்த அந்த பகுதி காங்கிரஸ் பிரமுகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டனர்.
2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த மறியல் போராட்டத்தால் மணலி சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மறியல் செய்தவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ராஜீவ் காந்தி சிலையை உடைத்த குற்றவாளியை கைது செய்வதாக காவல்துறையினர் வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து காங்கிரசார் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.