லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவு அலுவலர் கைது!

வெள்ளி, 24 அக்டோபர் 2008 (11:29 IST)
ஈரோடு அருகே பத்திரத்தின் நகல் எடுக்க லஞ்சம் வாங்கிய பத்திர‌ப்பதிவு அலுவலர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவ‌ட்ட‌ம் கோபிசெட்டிபாளைய‌த்தை அடு‌த்த நல்லிக்கவுண்டன்பாளையம் எ‌ன்ற ‌கிராம‌த்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (35). இவர் கோபி பத்திரபதிவு அலுவலகத்தில் 1905 மற்றும் 1925 ம் ஆண்டை சேர்ந்த இரண்டு பத்திரங்களின் நகல் கேட்டு விண்ணப்பித்தார்.
ஆனால் 3 மாதங்கள் ஆகியும் நகல் வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடித்தனர்.

மேலும் ரூ.800 லஞ்சம் கொடுத்தால் உடனே நகல் வழங்குவதாகவும் கூறினார்கள். இது குறித்து ராமமூர்த்தி ஈரோடு லஞ்ச ஒழிப்பு காவ‌ல்துறை‌க்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் காவ‌ல்துறை‌‌யின‌ரி‌ன் திட்டப்படி ராமமூர்த்தி, ோ‌பி பத்திர‌த் பதிவு அலுவலக‌த்திற்கு சென்றார். நேற்று சார்பதிவாளர் விடுமுறையில் இருந்தார். இதனால் தலைமை எழுத்தர் பழனிசாமியிடம் பத்திர நகல் வழங்ககோரி ரூ.800 லஞ்சமாக ராமமூர்த்தி வழங்கினார். உடனே பழனிசாமியை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்தனர்.

இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்