பேரூராட்சி ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணை: மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

புதன், 22 அக்டோபர் 2008 (13:56 IST)
பேரூராட்சி ஆய்வாளர்களாக தே‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள 190 பே‌ரி‌ல் 186 நப‌ர்களு‌க்கு பணி நியமன ஆணையினை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இ‌ன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

இதகு‌றி‌த்ததமிழக அரசு இ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செய்தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல்,"பேரூராட்சிகள் துறையில், அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான அடிப்படை வசதி மேம்பாட்டுத் திட்டம், ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டம், நகர்ப்புற ஏழைகளுக்கான அடிப்படை வசதி மேம்பாட்டுத் திட்டம், ஒருங்கிணைந்த வீட்டு வசதி மற்றும் குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டம், குறைந்த பட்ச தேவைத் திட்டம் போன்ற அத்தியாவசியமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டப் பணிகளை செயல்படுத்த பேரூராட்சித் துறை பொறியியல் பிரிவில் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளது. இததொடர்பாஅரசு ஏ‌ற்கனவே நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கட‌ந்ஆ‌ண்டசெ‌‌ப்ட‌ம்ப‌ர் 5ஆ‌மதே‌தி 250 பணி ஆய்வாளர் பணியிடங்களை புத்தாக்கம் செய்து ஆணையிடப்பட்டது.

இதனடிப்படையில் பேரூராட்சிகளில், ஐ.டி.ஐ., டி.சி.இ., டி.இ.இ., டி.எம்.இ., பி.இ. போன்ற தொழிற்கல்வி தகுதி பெற்று, 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக அடிப்படையில் பணித் தொகையில் கூலி பெறும் பணியாளர்களாக பணிபுரிந்து வந்த 190 பணியாளர்களின் நலனை பரிசீலித்து அரசு, அவர்களை பணி ஆய்வாளர்களாக ரூ.3,050-75-3,950-80-4,590 என்ற முறையான ஊதிய ஏற்ற விகிதத்தில் மாநில அளவில் பணியமர்த்தி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கட‌ந்செ‌‌ப்ட‌ம்ப‌ர் 9ஆ‌மதே‌தி ஆணை வெளியிட்டுள்ளது.

இ‌வ்வாறு நியமனம் செய்யப்பட்ட நபர்களுக்கான பணி நியமன ஆணையினை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இ‌ன்று வழங்கினார். பணித் தொகையில் கூலிபெறும் பணியாளர்களை, முறையான ஊதிய ஏற்ற விகிதத்தில் பணியமர்த்தி பணி நியமன ஆணை வழங்கப்பட்டது இத்துறையில் இதுவே முதன்முறையாகும்" எ‌ன்றகூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்