‌தீபாவ‌ளியை மு‌ன்‌னி‌ட்டு அ‌க். 24,26,27இ‌ல் நெ‌ல்லை‌க்கு பக‌ல்நேர சிறப்பு ரயில்கள்!

புதன், 22 அக்டோபர் 2008 (10:49 IST)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து நெ‌ல்லை‌க்கு பக‌ல்நேர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெ‌ற்கு ர‌யி‌ல்வே அ‌றி‌‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக தெ‌ற்கு ர‌யி‌ல்வே வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌‌றி‌ப்‌பி‌ல், சென்னை எழும்பூ‌ரி‌ல் இரு‌‌ந்து நெல்லை‌க்கு இய‌க்க‌ப்படு‌ம் பகல் நேர சிறப்பு ரயில் (எ‌ண். 0691), சென்னை எழும்பூரில் இருந்து அக். 24, 26, 29 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணிக்குப் புறப்பட்டு, அதேநாளில் இரவு 10 மணிக்கு நெல்லைக்கு சென்று சேரும்.

இதேபோ‌ல், நாகர்கோவி‌லி‌ல் இரு‌ந்து சென்னை எழும்பூரு‌க்கு இய‌க்க‌ப்படு‌ம் பகல் நேர சிறப்பு ரயில் (0692), நாகர்கோவிலில் இருந்து அக். 25, 28, 30 ஆகிய தேதிகளில் காலை 6.20ம‌ணிக்குப் புறப்பட்டு, மறுநாள் இரவு 7.15 மணிக்கு சென்னை எழும்பூருக்கு வந்து சேரும்.

திருச்சி‌யி‌ல் இரு‌ந்து எழு‌‌ம்பூரு‌க்கு இய‌க்க‌ப்படு‌ம் ‌சிற‌ப்பு ரய‌ி‌ல் (எ‌ண். 0682) அக். 28ஆ‌ம் தேதி இரவு 8.15 ம‌ணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதி காலை 3.15 மணிக்கு எழும்பூருக்கு வந்து சேரும்.

சென்னை எழும்பூ‌ரி‌‌ல் இரு‌ந்து திருச்சி‌க்கு இய‌க்க‌ப்படு‌ம் சிறப்பு ரயில் (0681): எழும்பூ ரில் இருந்து அக். 29ஆ‌ம் தேதி இரவு 11.45ம‌ணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 6.15 மணிக்கு திருச்சி சென்று சேரும்.

சென்னை எழும்பூ‌ரி‌ல் இரு‌ந்து நாகர்கோவிலு‌க்கு இய‌க்க‌ப்படு‌ம் சிறப்பு ரயில் (0649), எழும்பூரில் இருந்து அக். 29ஆம் தேதி இரவு 8.25ம‌ணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவிலுக்குச் சென்று சேரும்.

நாகர்கோவி‌லி‌ல் இரு‌ந்து சென்னை எழும்பூரு‌க்கு இய‌க்க‌ப்படு‌ம் சிறப்பு ரயில் (0650), நாகர்கோவிலில் இருந்து அக். 30ஆ‌ம் தேதி பிற்பகல் 1.30மண‌ிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30-க்கு சென்னை எழும்பூருக்கு வந்து சேரும்.

சென்னை எழும்பூ‌ரி‌லஇரு‌ந்தநாகர்கோவிலு‌க்கஇய‌க்க‌ப்படு‌மசிறப்பு ரயில் (0613), எழும்பூரில் இருந்து அக். 30ஆ‌ம் தேதி இரவு 8.25ம‌ணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவிலுக்குச் சென்று சேரும்.

நாகர்கோவி‌லி‌லஇரு‌ந்தசென்னை எழும்பூரு‌க்கஇய‌க்க‌ப்படு‌ம் சிறப்பு ரயில் (0614), நாகர்கோவிலில் இருந்து அக். 31ஆ‌ம் தேதி பிற்பகல் 1.30ம‌ணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை எழும்பூருக்கு வந்து சேரும்.

சென்னை எழும்பூ‌ரி‌லஇரு‌ந்தநாகர்கோவிலு‌க்கஇய‌க்க‌ப்படு‌மசிறப்பு ரயில் (0615), எழும்பூரில் இருந்து அக். 31ஆ‌ம் தேதி இரவு 11.45ம‌ணிக்குப் புறப்பட்டு, மறு நாள் பிற்பகல் 2.30 மணிக்கு நாகர்கோவிலுக்குச் சென்று சேரும்.

நாகர்கோவி‌லி‌லஇரு‌ந்தசென்னை எழும்பூரு‌க்கஇய‌க்க‌ப்படு‌ம் சிறப்பு ரயில்(0616), நாகர்கோவிலில் இருந்து நவ.1ஆ‌ம் தேதி இரவு 7.40 ம‌ணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8.50 மணிக்கு சென்னை எழும்பூருக்கு வந்து சேரும்.

மதுரை‌யி‌ல் இரு‌ந்து எழும்பூரு‌க்கு இய‌க்க‌ப்படு‌ம் சிறப்பு ரயில் (0612), மதுரையில் இருந்து அக். 28ஆ‌ம் தேதி இரவு 11.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8.50 மணிக்கு எழும்பூருக்கு வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில்களு‌க்கான இன்று முன்பதிவு இ‌ன்று (புதன்கிழமை) தொடங்குகிறது" எ‌ன்று கூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்