தீபாவளி‌க்கு தியேட்டர்களில் 5 காட்‌சி‌க்கு அனுமதி!

புதன், 22 அக்டோபர் 2008 (10:35 IST)
தீபாவளி பண்டிகையையொட்டி சினிமா தியேட்டர்களில் 5 காட்சிகள் நடத்திக்கொள்வதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொட‌ர்பாக தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச்செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க தமிழக அரசு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிரந்தர மற்றும் பகுதி நிரந்தர திரையரங்குகளுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் அதிகப்படியாக ஒரு காட்சி (5-வது காட்சி) நடத்திக்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

மேலும், வருகிற 27ஆ‌ம் தேதி மற்றும் நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை ஆதலால் அந்த நாட்களிலும் அதிகப்படியாக ஒரு காட்சி நடத்திக்கொள்ளலாம்.

அதேபோல், நடமாடும் திரையரங்குகளுக்கு அக்டோபர் 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் பகல் காட்சியும், அக்டோபர் 27 மற்றும் நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் காலை காட்சிகள் நடத்திக்கொள்வதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த விவரத்தை மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் மற்றும் கேளிக்கைவரி அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட்டு கூடுதல் காட்சிகளை நடத்திக்கொள்ளலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது'' எ‌ன்று பன்னீர்செல்வம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்