மண‌ல் கட‌த்த‌ல்: குளித்தலையில் நாளை உ‌ண்ணா‌விரத‌ம்-ஜெயலலிதா!

செவ்வாய், 21 அக்டோபர் 2008 (13:08 IST)
மண‌ல் கட‌த்தலை க‌ண்டி‌த்து அ.இ.அ.தி.மு.க. சா‌ர்‌பி‌ல் கு‌ளி‌த்தலை‌யி‌ல் நாளை உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா தெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoWD
இது தொட‌‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்டத்தில் திம்மாச்சிபுரம், கட்டளை, வாங்கல், நெரூர், மருதூர், வதியம் லாலாபேட்டை ஆகிய இடங்களிலும், திருச்சி மாவட்டத்தில் அன்பில், நொச்சியம், திருவேங்கிமலை, அய்யம்பாளையம், முசிறி, வரதராஜபுரம் மற்றும் தொட்டியம் ஆகிய இடங்களிலும் மணல் எடுக்கப்பட்டு வருகிறது.

2 ூனிட் மணலுக்கு அரசு தொகையாக 626 ரூபாயை செலுத்திவிட்டு, மறைமுகமாக கோயம்புத்தூர், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு கடத்தப்பட்டு, அங்கு 2 ூனிட் மணல் 5,000 ரூபாய் அளவிற்கு விற்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. இதன் பின்னணியில் கரூர் தி.மு.க. நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பழனிச்சாமி இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.

இதைக்கண்டித்து கரூர் மற்றும் திருச்சி புறநகர் மாவட்ட அ.இ.அ.‌தி.மு.க. சார்பில், நாளை (22ஆ‌ம் தே‌தி) குளித்தலையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்'' எ‌ன்று ஜெயல‌லிதா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.