காஞ்‌சிபுரத்தில் இடிதாக்கி 3 பேர் பலி!

சனி, 18 அக்டோபர் 2008 (15:59 IST)
கா‌ஞ்‌சிபுர‌த்‌தி‌ல் வய‌லி‌ல் வேலை செ‌ய்து கொ‌ண்டிரு‌ந்த ஒரே குடு‌‌ம்ப‌த்தை சே‌ர்‌ந்த 3 பே‌ர் இடிதா‌க்‌கி உ‌‌யி‌‌ரிழ‌ந்தன‌ர்.

காஞ்‌சிபுர‌‌ம் மாவ‌ட்ட‌ம் ஊ‌த்து‌க்காடு ‌கிராம‌த்தை சே‌ர்‌ந்த ப‌த்து பே‌ர் அ‌ங்கு‌ள்ள வயல்வெளியில் வேலை செய்து கொண்டு கொ‌ண்டிரு‌ந்தன‌ர்.

அ‌ப்போது இடியுட‌ன் கூடிய பல‌த்த மழை பெ‌ய்தது. இ‌தி‌ல் ‌மி‌‌ன்ன‌ல் தா‌க்‌‌கி 7 பேர் பல‌த்த காய‌ம் அடை‌ந்தன‌ர். உடனடியாக அவ‌ர்க‌ள் அனைவரு‌ம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு முருகன் (40) அவரது மனைவி பத்மாவதி (35) இவர்களது மகள் நிர்மலா (18) ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்