இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண். 0611) எழும்பூரில் இருந்து 20ஆம் தேதி பிற்பகல் 3.15மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 5.30க்கு நாகர்கோவில் சென்றடையும்.
நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (0612), நாகர்கோவிலில் இருந்து 21ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (0615), எழும்பூரில் இருந்து 22ஆம் தேதி இரவு 11.45மணிக்குப் புறப்பட்டு, மறு நாள் பிற்பகல் 2.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (0616), நாகர்கோவிலில் இருந்து 23ஆம் தேதி இரவு 7.40மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (0619), எழும்பூரில் இருந்து 21ஆம் தேதி மாலை 6.40மணிக்குப் புறப்பட்டு, மறு நாள் காலை 8.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (0620), நாகர்கோவிலில் இருந்து 22ஆம் தேதி பிற்பகல் 1.30மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (0638), நாகர் கோவிலில் இருந்து 20ஆம் தேதி மாலை 4.30மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்
சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (0637), சென்னை சென்ட்ரலில் இருந்து 21ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (0634), நாகர்கோவிலில் இருந்து 26ஆம் தேதி மாலை 4.30மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (0633), சென்னை சென்ட்ரலில் இருந்து 27ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (0675), சென்ட்ரலில் இருந்து 21ஆம் தேதி இரவு 10.20மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7 மணிக்கு கோவை சென்றடையும்.
கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (0676), கோவையில் இருந்து 22ஆம் தேதி இரவு 11.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது.