மிரட்டல் மின்னஞ்சல்-சென்னை நபர் கைது!

வியாழன், 16 அக்டோபர் 2008 (02:03 IST)
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு மின்னஞ்சல்கள் மூலம் மிரட்டல் விடுத்ததாக சென்னையைச் சேர்ந்த மென்பொருள் புரோகிராமர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் அதிகாரபூர்வ இணையதள முகவரிக்கு 5 மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன, அதில் பிரதீபா பாட்டீல் மீது கடும் குற்றச்சாட்டுகள் இருந்ததோடு, கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்ற மிரட்டல் செய்தியும் இருந்தது.

இதனையடுத்து சென்னை காவல்துறையும், மத்திய பாதுகாப்பு முகமைகளும் பல்வேறு இணையதள முகவரிகளை தடம் கண்டு விசாரணை நடத்தினர். இதில் 2 நபர்கள் சிக்கினர். இவர்களிடம் அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணைகளுக்கு பிறகு ஸ்ரீராம் ஜகன்னாத் என்ற 23 வயது கணினி புரோகிராமர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்