‌மி‌ன்வெ‌ட்டை க‌ண்டி‌த்து கடலூரில் ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா!

புதன், 15 அக்டோபர் 2008 (15:43 IST)
கடலூ‌ரி‌ல் கடுமையான மின்சார வெட்டினை நடைமுறைப்படுத்தியுள்ள ‌தி.மு.க. அரசை க‌ண்டி‌த்து‌ம் கடலூர் அரசு பொது மருத்துவமனையில் நிலவி வரும் நிர்வாகச் சீர்கேடுகளை கண்டித்தும் அ.இ.அ.‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் நாளை க‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌‌ட்ட‌‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''24 மணி நேரமும் இயங்கி வரும் கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் ஒரு நாளைக்கு பல மணி நேரம், அடிக்கடி மின்சார வெட்டு ஏற்படுவதால் ஒரு ஷிப்ட் கூட உருப்படியாக இயக்க முடியாத நிலைமை அங்கு நிலவுகிறது. இதன் காரணமாக அங்குள்ள தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதுடன், ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் உரிய நேரத்தில் நடத்த முடியவில்லை என்றும், கடலூர் அரசு பொது மருத்துவமனையில் பெரும்பாலான பணியாளர்கள், மருத்துவப் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அங்கு ஊழல் தலைவிரித்து ஆடுவதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பாதாள சாக்கடைத் திட்டம் என்ற பெயரில் கடந்த 28 மாத காலமாக, கடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளும் தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக உள்ளன என்றும், இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவியர் மற்றும் அலுவலகம் செல்வோர் உள்ளிட்அனைவரும் பாதுகாப்பாக செல்ல முடியாமல் விபத்துகள் நிகழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.

மேற்படி பாதாள சாக்கடைத் திட்டமும் தற்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது தவிர, கடலூர் நகராட்சியில் குடிநீர் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும், மேலும் புதுப்பாளையம், வன்னியர் பாளையம், வண்ணாரப்பாளையம் மற்றும் மஞ்சக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் செம்மண் கலந்த கலவையாக வருவதாகவும், இதன் விளைவாக மக்கள் பலவிதமான நோய்களுக்கு ஆட்படுவதாகவும் தெரிய வருகிறது.

எனவே, கடலூர் மாவட்ட மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கும் வகையில், கடுமையான மின்சார வெட்டினை நடைமுறைப்படுத்தியுள்ள மற்றும் கடலூர் அரசு பொது மருத்துவமனையில் நிலவி வரும் நிர்வாகச் சீர்கேடுகளை சரி செய்யத் தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்தும், கடலூர் நகராட்சியின் அத்தியாவசியத் தேவை களை நிறை வேற்றத் தவறிய நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்களின் அனைத்து அத்தியாவசியத் தேவைகளையும் உடனடியாக நிவர்த்தி செய்ய வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கடலூர் கிழக்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை யின் சார்பில், 16.10.2008 வியாழக் கிழமை அன்று காலை 10 மணி அளவில், கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறும்'' எ‌ன்று ஜெயல‌லிதா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.