அ.இ.அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நீக்கம்: ஜெயலலிதா நடவடிக்கை!
புதன், 15 அக்டோபர் 2008 (15:19 IST)
அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செ.சின்னசாமி, திருச்சி புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா நீக்கியுள்ளார்.
இதேபோல் திருச்சி புறநகர் மாவட்ட துணைச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் ராமு பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, திருச்சி புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.