நமக்குள் சகோதர யுத்தம் வேண்டாம்: கருணாநிதி உருக்க‌ம்!

புதன், 15 அக்டோபர் 2008 (12:30 IST)
'செ‌ன்னதலைமை‌சசெயலக‌த்த‌ி‌‌லநே‌ற்றநட‌ந்அனை‌த்து‌க்க‌ட்‌சி கூ‌ட்ட‌‌த்ததொட‌ங்‌கி வை‌த்தபே‌சிமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி, ''இலங்கை‌தமிழர் பிரச்சனையில் நமக்குள் சகோதர யுத்தம் வேண்டாம்'' என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்து‌ள்ளார்.

webdunia photoFILE
இந்தக் கூட்டம் ஒருவருக்கொருவர் நன்றி தெரிவித்துக் கொள்வதற்காகக் கூட அல்ல எ‌ன்று‌மதனித்தனியாக ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய இயக்கத்தின் சார்பாக இலங்கையில் நடைபெறுகின்ற கொடுமைக்கு எதிரான குரலை உயர்த்தினால் மாத்திரம் போதாது. எல்லோருடைய குரலும் ஒரு குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது எ‌ன்றதெ‌ரி‌வி‌த்தா‌ரமுதலமை‌ச்‌ச‌ரகருணா‌நி‌தி.

இது தனித்தனியாக ஒவ்வொரு கட்சியும் குரல் எழுப்புவது தவறு என்ற கருத்தின் அடிப்படையிலே அல்ல. தனித்தனியாக குரல் எழுப்புகின்றவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரே குரலில் நம்முடைய வலிமையை, நம்முடைய பலத்தினைக் காட்டுகின்ற வகையில், தமிழர்களுடைய இதயம் எல்லாம் பக்கத்திலே வாடிக் கொண்டிருக்கின்ற ஒரு பெரிய இனத்தின், தமிழ் இனத்தின் வாழ்வைப் பற்றிய ஒன்றாக இருக்கின்ற காரணத்தால் அதிலே எப்படி வெற்றி காண்பது என்பதைத் தீர்மானிக்க நாம் எந்த முடிவுகளை மேற்கொள்வது என்பதைப் பற்றி கருத்தறிய, அறிந்த கருத்துக்களை எல்லாம் ஒருமுனைப்படுத்த உதவிடும் என்பதற்காகத்தான் இந்த கூட்டத்தை கூட்டியிருக்கின்றோம்.

இந்த கூட்டத்திற்கு வராதவ‌ர்க‌ளஇலங்கை பிரச்சனையிலே பின்னடைவு கொண்டு வரவில்லை என்று கருதத் தேவையில்லை. என்னுடைய பிரச்சனையிலே அவர்களுக்குள்ள அதிருப்தியின் காரணமாகத் தான் வரவில்லையே தவிர, இலங்கையிலே தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும், அவர்களை சிங்கள வெறியர்களுக்கு களப்பலியாக ஆக்கக் கூடாது, அவர்கள் சிங்கள ராணுவத்திற்கு பலியாகி மாண்டு மடியக் கூடாது என்பதில் எல்லோரையும் போலவே ஒத்தக் கருத்து உடையவர்கள் தான் என்றாலுங்கூட, இன்று வராத காரணத்தால் அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்று சிங்கள வெறியர்கள் நினைத்து விடக் கூடாது எ‌ன்றகருணா‌நி‌தி கே‌ட்டு‌ககொ‌ண்டா‌ர்.

''இந்த கூட்டத்தின் மூலமாக எடுத்துச் சொல்லப்பட்ட அந்த மறுப்புக் கருத்துகள் அவர்கள் காதுகளிலே விழுமேயானால், இது சிங்கள வெறியர்களுக்கு ஒரு ஊக்கமாக, ஆக்கமாக அமைந்து விடக் கூடாது, அமைய விடவும் மாட்டோம். யார் நம்மிடமிருந்து விலகிச் சென்றாலுங்கூட இந்த பிரச்சனையிலே அவர்களையெல்லாம் அழைத்து வைத்து, இழுத்து வைத்து ஓரணியிலே நாம் திரண்டு மத்திய அரசை வலியுறுத்தி நம்முடைய தமிழ் மக்களை இலங்கையிலே காப்பாற்றுகின்ற அந்த முயற்சியிலே வெற்றியடைவோம் எ‌ன்பதமாத்திரம் தெரிவித்துக்கொள்கிறேன்'' எ‌ன்றகருணா‌நி‌தி உறு‌திபகூ‌றினா‌ர்.

நான் நீண்ட காலமாக விடுதலைப் போராட்டத்திலே ஈடுபட்டவர்களுக்குள்ளே, அவர்களுக்குள்ளே சகோதர யுத்தம் கூடாது என்பதை வலியுறுத்தி வருகிறேன். அத்தகைய சகோதர யுத்தத்தால் ஏற்பட்ட விளைவுகளையெல்லாம் நாம் நன்கறிந்திருக்கின்றோம். இந்திரா காந்தியால் கிடைத்த உதவிகளைக் கூட நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் அந்தச் சகோதர யுத்தம், நம்முடைய இலக்கினைப் பாழ்படுத்தி விட்டது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் எ‌ன்றகருணா‌நி‌தி கே‌ட்டு‌ககொ‌ண்டா‌ர்.

இந்திரா காந்தி உலகத்தில் உள்ள பல அமைப்புகளின் சார்பாக கண்டனங்களையெல்லாம் கூடப் பொருட்படுத்தாமல், நூறுக்கு மேற்பட்ட முகாம்களை இந்தியாவிலே விடுதலைப்புலிகளுக்கு அமைவதற்கும், அந்தப் போராளிகளுக்கு உதவிகளை வழங்குவதற்கும் அவர்கள் அன்றைக்கு ஆயத்தமாக இருந்தது மாத்திரமல்லாமல், ஆதரவும் அளித்தார்கள். அப்படிப்பட்டவர்களுடைய உதவிகளைக் கூடப் பெற்று, அந்தப் போராட்டத்திலே நாம் வெற்றி பெற முடியாமல் போனதற்குக் காரணம், நம்மிடையே ஏற்பட்ட சகோதர யுத்தம் தான் என்பதை மறந்து விடக் கூடாது எ‌ன்றா‌ரகருணா‌நி‌தி.

''இன்றைக்கு இலங்கையிலே நடைபெறுகின்ற இந்த அக்கிரமங்களை இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம், நாம் பலகீனப்பட்டது தான். இப்படி சகோதர யுத்தத்தால் நாம் பாழ் பட்டு விட்டோம் என்பதை மறந்து விடாமல், அந்த சகோதர யுத்தங்கள் காட்டிய பாடத்தை இப்போது நாம் பெற வேண்டிய பாடமாகப் பெற்று, இப்போதாவது இலங்கை தமிழர்களுக்கு ஒற்றுமையாக இருந்து உதவிகள் செய்ய உறுதி எடுத்துக்கொள்வோம்'' எ‌ன்றகருணா‌நி‌தி கேட்டுக்கொ‌ண்டா‌ர்.