நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு 20 ‌விழு‌க்காடு போனஸ்: கருணாநிதி உத்தரவு!

செவ்வாய், 14 அக்டோபர் 2008 (14:38 IST)
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு 20 ‌விழு‌க்காடு போன‌ஸ் வழ‌ங்கவு‌ம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு முதன் முறையாக இந்த ஆண்டு ரூ.1,000 கருணைத் தொகை வழங்கவும் முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இது தொட‌ர்பாக தமிழக அரசு இ‌‌‌ன்று வெளியிட்டுள்ள செய்தி‌க்குறிப்பில், "2007-2008ஆ‌ம் ஆண்டிற்கு தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கக் கோரி தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் எம்ப்ளாயீஸ் ூனியன் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் அரசுக்கு கோரிக்கை சமர்ப்பித்திருந்தன.

2007-2008ஆ‌ம் ஆண்டுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்கள், பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட 8.33 ‌விழு‌க்காடபோனஸ் மற்றும் 11.67 ‌விழு‌க்காடகருணைத் தொகை, ஆக மொத்தம் 20 ‌விழு‌க்காடவழங்கவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு முதன் முறையாக இந்த ஆண்டு ரூ.1,000 கருணைத் தொகை வழங்கவும் முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இதன் மூலம், 16,340 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்கள், பருவகாலப் பணியாளர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு போனசும், கருணைத் தொகையும் ரூ.10.76 கோடி வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் 13,226 சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.1.32 கோடி கருணைத் தொகை வழங்கப்படுகிறது" எ‌ன்று கூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்