சென்னையிலிருந்து தூத்துக்குடி, மதுரைக்கு சிறப்பு ரயில்!
செவ்வாய், 14 அக்டோபர் 2008 (10:44 IST)
பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரயில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு அக்டோபர் 16ஆம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் (வ.எண். 0619) எழும்பூரில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.15 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.
மறுமார்க்கம், தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு 17ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (0620) தூத்துக்குடியில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, மீளவிட்டான் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். தூத்துக்குடியில் இருந்து சென்னை வரும் சிறப்பு ரயில் மாம்பலத்தில் கூடுதலாக நின்று செல்லும்.
அதே போல், சென்னையில் இருந்து இன்று மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (0633) எழும்பூரில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு மதுரையை சென்றடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.