மோசமான வா‌னிலையா‌ல் விமானங்கள் தாமதம்!

திங்கள், 13 அக்டோபர் 2008 (16:23 IST)
மோசமாவா‌னிலகாரணமாக ‌செ‌ன்னை‌க்கு வ‌ந்த 12 விமான‌ங்க‌ளதாமதமாபுற‌ப்ப‌ட்டசெ‌‌ன்றன.

வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தா‌ழ்வம‌ண்டல‌மகாரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இ‌ன்றபலத்த மழை பெய்தது. இதனா‌ல் வா‌னிலை மோசமாக காண‌ப்ப‌ட்டது. அதோடவிமான ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கி இருந்தது.

காலை 8.30 ம‌ணி‌‌க்கவரவே‌ண்டிபெ‌ங்களூரு-செ‌ன்னை ‌கி‌ங்‌பி‌ஷ்ச‌ர் ‌விமான‌ம் 9.40 ம‌ணி‌‌்கு‌ம், காலை 8.40 ம‌ணி‌க்கு வர வேண‌்டிய டெ‌ல்‌லி- செ‌ன்னை ஜெ‌ட் ‌விமான‌ம் காலை 10 ம‌ணி‌க்கு வ‌ந்து சே‌ர்‌ந்தது.

இது த‌விர 12 ‌விமான‌ங்க‌ள் மோசமான வா‌னிலை காரணமாக தாமதமாக புற‌ப்ப‌ட்டு செ‌‌ன்றது.

சென்னைக்கு வர வேண்டிய விமானங்கள் 1 மணி முதல் ஒ‌ன்றரை மணி நேரம் தாமதமாக வந்தன. இதேபோல சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்