அனைத்து‌க் கட்சி கூட்டத்தில் தே.மு.தி.க. கலந்துகொள்ளாது: விஜயகாந்த்!

ஞாயிறு, 12 அக்டோபர் 2008 (18:47 IST)
இல‌ங்கை‌ த‌மிழ‌ர் ‌பிர‌ச்‌சினை கு‌றி‌த்து ‌விவா‌தி‌ப்பத‌ற்காக முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌‌தி தலைமை‌யி‌ல் வரு‌ம் 14ஆ‌ம் தே‌தி நடைபெற உ‌ள்ள அனை‌த்து‌க் க‌ட்‌சி‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் தே.மு.‌தி.க. கல‌ந்து கொ‌ள்ளாது எ‌ன்று அ‌க்‌க‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ர் ‌‌விஜயகா‌ந்‌த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது கு‌றி‌த்து அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கை தமிழர் பிரச்சினைக்காக 14ஆ‌ம் தேதி நடத்தவுள்ள அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் எதற்கு என்று புரிந்துகொள்முடியவில்லை.

இந்திய அரசு முதல் இங்குள்ள உள்ளாட்சி மன்றம் வரை தி.மு.க. சார்ந்துள்ள கூட்டணி கட்சிகள்தான் ஆட்சி செய்கின்றன. ஆகவே, செய்யக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிற தி.மு.க. அரசு இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை விரைந்து செய்ய கடமைப்பட்டிருக்கிறது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை காரணம் காட்டி சொந்த பாதுகாப்பை பலப்படுத்தி கொள்ளும் ஜெயலலிதாவின் போக்கை தே.மு.தி.க. ஆதரிக்கவில்லை.

ஆனால் அதே நேரத்தில் இலங்கை அரசுக்கு இந்திய அரசு பிறர் அறியா வண்ணம் ரகசிய ஒத்துழைப்பு தருவதையும், இலங்கை தமிழர்கள் வசிக்கப்படுவதையும் தே.மு.தி.க. கண்டிக்கிறது.

தடைசெய்யப்பட்ட நாகர்களின் இயக்கத்தோடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவரும் இந்திய அரசு‌ம், இலங்கை அரசும் அதே வகையில் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வுகாண வேண்டும் என்று ஏன் வற்புறுத்தக்கூடாது?.

எனவே மக்களை திசை திருப்புவதற்காக நடத்தப்படும் அனைத்து கட்சி கூட்டத்தில் தே.மு.தி.க. கலந்துகொள்ளாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" எ‌ன்று விஜயகாந்த் கூறியுள்ளார்.