சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் பகலில் ஒன்றரை மணி நேரமும் மற்ற மாவட்டங்களில் காலையில் 4 மணி நேரம், மாலையில் 1 மணி நேரம், இரவில் ஒன்றரை மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது என்றார்.
எந்தெந்த நேரம் மின்வெட்டு இருக்கும் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணைப்படிதான் இனி மின்வெட்டு இருக்கும். மற்ற நேரங்களில் மின்வெட்டு இருக்காது என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு ரூ.8,000 கோடியில் மின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த திட்டங்கள் நிறைவேறுவதன் மூலம் தமிழகத்தில் எதிர்காலத்தில் மின் பற்றாக்குறை இருக்காது என்றும் மச்சேந்திர நாதன் கூறியுள்ளார்.