இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் 9 பேருக்கு நியமன ஆணை:அமைச்சர் வழங்கினார்!
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (16:42 IST)
இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 9 பேருக்கு அதற்கான பணி நியமன ஆணையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில், முதல்நிலை திருக்கோயில்கள், முதல்நிலை செயல் அலுவலர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இத்திருக்கோயில்களுக்கு, தமிழக அரசு புதிதாக 9 முதல்நிலை செயல் அலுவலர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்து நேரடி நியமனம் செய்துள்ளது.
புதிதாக முதல்நிலை செயல் அலுவலர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த 9 பேருக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். பெரியகருப்பன் இன்று சென்னை இந்து சமய அறநிலையத்துறை, ஆணையர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணி நியமன ஆணையினை வழங்கினார்" என்று கூறப்பட்டுள்ளது.