மின்வெட்டை கண்டித்து மருங்காபுரியில் ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு!
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (15:39 IST)
திருச்சி மாவட்டம் மருங்காப்புரி பகுதியில் நிலவும் கடுமையான மின்வெட்டைக் கண்டித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டின் காரணமாக அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மருங்காபுரி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் மின்வெட்டு, டீசல் தட்டுப்பாடு காரணமாக பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மின்சாரத் தட்டுப்பாட்டிற்குக் காரணமாண தி.மு.க. அரசைக் கண்டித்து அ.இ.அ.தி.மு.க. திருச்சி புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவையின் சார்பில் நாளை (சனிக் கிழமை) காலை 10 மணியளவில் மருங்காபுரி-துவரங்குறிச்சி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.