அந்தியூரில் சூறாவளி: வாழைகள் சேதம்

வெள்ளி, 10 அக்டோபர் 2008 (13:25 IST)
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் வீசிய கடுமையான சூறாவளி காற்றினால் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழைகள் சாய்ந்து நாசமாகின.

அந்தியூர் பகுதியில் வாழை பயிரிடப்பட்டு, குலைதள்ளி அறுவடைக்குத் தயாராக இருந்தது. தற்போது வாழைக்கு நல்ல விலை கிடைப்பதால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

ஆனால், நேற்றிரவு திடீரென சூறாவளிக் காற்று வீசியது. இந்த காற்றில் சுமார் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் கீழே சாய்ந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.

வாழை பயிர் விலைபோக வேண்டிய நேரத்தில், சூறாவளிக் காற்றால் சாய்ந்து விட்டதால், விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்