இல‌ங்கை த‌மிழ‌ர் ‌பிர‌‌ச்‌சினை: திருச்சி சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்!

வெள்ளி, 10 அக்டோபர் 2008 (12:03 IST)
இலங்கை‌யி‌ல் த‌மிழ‌ர்‌க‌ள் கொ‌ல்ல‌ப்படுவதை கண்டித்து‌ம், அவ‌ர்க‌ள் ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்து‌ம் அ‌ந்நா‌ட்டு ராணுவ‌த்தை‌க் க‌ண்டி‌த்து‌‌ம் ‌திரு‌ச்‌சி ம‌த்‌திய சிறை‌யி‌ல் உ‌ள்ள கை‌திக‌ள் இ‌‌ன்று உ‌ண்ணா‌விரத‌‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை ராணுவத்தை கண்டித்து இன்று முழுவதும் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக சிறை அதிகாரிகளிடமதெ‌ரி‌வி‌த்த கைதிகள் மாலை 5 மணி வரை போரா‌ட்ட‌த்தை தொட‌ர‌ப்போவதாக கூ‌றியு‌ள்ளன‌ர்.

இ‌ந்த உண்ணாவிரத‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் தமிழர் விடுதலை படை இயக்கத்தலைவர், பொன் பரப்பி ராஜேந்திரன் தலைமையில் ஆயு‌ள் த‌ண்டனை கை‌திக‌ள் உ‌ள்பட 1,000‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட கைதிகள் ப‌ங்கே‌ற்று‌‌ள்ளன‌ர்.

தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளு‌ம் அமைப்புகளு‌ம் இலங்கை ராணுவத்தை கண்டித்து க‌ண்டன குரல் கொடுத்து வரு‌ம் இ‌வ்வேளை‌யி‌ல் ‌‌திரு‌ச்ச‌ி ம‌த்‌திய ‌சிறை‌யி‌ல் கை‌திக‌‌ள் இ‌ப்போரா‌ட்ட‌த்தை நட‌த்‌தி வரு‌‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்