கா‌த‌‌லி‌ன் ‌விழு‌ந்தே‌ன் ‌பட‌ப் பிர‌ச்சனை: ஆற்காடு வீராசாமி அ‌றி‌க்கை!

திங்கள், 6 அக்டோபர் 2008 (15:48 IST)
தி.மு.க.விற்கு எதிராகவும், ‌‌தி.ு.க. ஆட்சிக்கு எதிராகவும் தொலைக்காட்சி, பத்திரிகைகளி‌ல் பேட்டி கொடுத்திரு‌க்கு‌ம் இயக்குநர் பிரசாத்துக்கும், என‌க்கு‌ம் எந்தவித ஒட்டும் உறவும் இல்லை'' எ‌ன்று அமை‌ச்ச‌ர் ஆ‌‌ற்காடு ‌வீராசா‌மி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், 'காதலில் விழுந்தேன்' பட இயக்குநர் பி.வி.பிரசாத் எனது சிறிய தாயாரின் பேரன். இவர் இயக்கியுள்ள இந்த படம் சன் தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் பிரசாத் தி.மு.க.விற்கு எதிராகவும், ‌‌தி.மு.க. ஆட்சிக்கு எதிராகவும் தொலைக்காட்‌சி, பத்திரிகைகளிலும் பேட்டி கொடுத்திருக்கிறார். எனக்கும், இயக்குநர் பிரசாத்துக்கும் எந்தவித ஒட்டும் உறவும் இல்லை. எங்கேயாவது அவர் எனது பெயரைப் பயன்படுத்தினால், அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன்.

எனவே திரைப்படத் துறையினரும், தயாரிப்பாளர்களும் இயக்குநர் பிரசாத் ‌விடயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' எ‌ன்று அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌‌வீராசா‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.