இலங்கை பிரச்சனை: நடவடி‌க்கை எடு‌ப்பதாக கருணாநிதி‌யிட‌ம் பிரதமர் உறுதி!

திங்கள், 6 அக்டோபர் 2008 (13:40 IST)
இல‌ங்கை‌யி‌ல் அமைதி காண்பதற்கான நடவடிக்கைகளையும் தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் தொடராமல் அவர்கள் பாதுகாக்க‌ப்படுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று முதலமைச்சர் கருணா‌நி‌தி, ‌பிரதம‌‌‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கிட‌ம் கே‌ட்டு‌க் கொ‌ண்ட‌தன் பே‌ரி‌ல், நடவடி‌க்கை எடு‌ப்பதாக‌ ‌பிரதம‌ர் உறு‌தி அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக தமிழக அரசு இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மன்மோகன் சிங் இன்று பகல் 11.30 மணி அளவில் முதலமைச்சர் கருணாநிதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இலங்கைப் பிரச்சினை குறித்துப் பேசினார்.

அப்போதமுதலமைச்சர் கருணாநிதி, ‌இல‌ங்கை‌யி‌ல் நடைபெற்று வரும் ‌இல‌ங்கை அரசின் ராணுவ நடவடிக்கை இனப்படுகொலை குறித்தெல்லாம் இந்தியப் பிரதமரிடம் விவரித்துவிட்டு, உடனடியாக மத்திய அரசு டெல்லியில் உள்ள இல‌ங்கை‌த் தூதரை அழைத்து, இலங்கை‌த் தமிழினப் படுகொலை குறித்த கண்டனத்தை அவர் மூலமாக தெரிவித்திட வேண்டுமென்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து இல‌ங்கை‌யி‌ல் அமைதி காண்பதற்கான நடவடிக்கைகளையும் தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் தொடராமல் அவர்கள் பாதுகாக்க‌ப்படுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும், இந்தப் பிரச்சனைகள் அவசர அவசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் பிரதமரிடம் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

மிகுந்த அக்கறையுடனும் கவலையுடனும் பிரதமர், முதலமைச்சரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார்'' எ‌ன்று அரசு செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்