அ.இ.அ.தி.மு.க.வின் 37வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அக்டோபர் 17ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா பேசுகிறார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.இ.அ.தி.மு.க. தொடங்கி 36 ஆண்டுகள் நிறைவடைந்து, வருகின்ற 17.10.2008 வெள்ளிக்கிழமை அன்று 37வது ஆண்டு தொடங்குவதை கொண்டாடும் வகையில், நான், அன்றைய தினம் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்திற்கு சென்று, அங்கு நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலையை திறந்து வைத்து, கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து, அங்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளேன்.
அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 18, 19 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் பகுதிகளிலும், அ.இ.அ.தி.மு.க. அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, மகராஷ்டிரா, ஆந்திரா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
பொதுக்கூட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுமாறு ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.