‌மி‌ன்வெ‌ட்டை‌க் க‌ண்டி‌த்து ‌விருதுநக‌ரி‌ல் அ.இ.அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா!

ஞாயிறு, 5 அக்டோபர் 2008 (17:51 IST)
மி‌ன்வெ‌ட்டை‌க் க‌ண்டி‌த்து ‌விருதுநக‌ர் மாவ‌ட்ட‌ம் ராஜபாளையம் ஒன்றியம் சத்திரப்பட்டி மின்சார அலுவலகம் முன்பு வரு‌ம் 7ஆ‌ம் தே‌தி அ.இ.அ.ி.ு.க. சா‌ர்‌‌பி‌ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறு‌ம் என்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெயலலிதா அ‌‌றி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், சமுசிகாபுரம் பகுதிகளில் சுமார் 5,000 விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதனை நம்பி 10,000 தொழிலாளர்களும், இதனைச் சார்ந்த மற்ற தொழில்களை நம்பி 5,000 தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

ி.ு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையால் விருதுநகர் மாவட்டத்தில் வாரத்திற்கு ஒரநாள் கட்டாய மின்சார விடுமுறையும், தினசரி பல மணி நேர மின்வெட்டும் அமலில் இருக்கின்றன.

இதன் விளைவாக, தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மீதமுள்ள 3 நாட்கள் அவர்களுக்கு வேலை இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதாவது, கிட்டத்தட்ட மாதத்திற்கு பாதி நாட்கள் தொழிலாளர்கள் வேலையின்றி இருக்கிறார்கள்.

எனவே, இதற்கெல்லாம் காரணமான தி.ு.க. அரசைக் கண்டித்து விருதுநகர் மாவட்ட அ.இ.அ.ி.ு.க. சார்பில் வரு‌ம் 7ஆ‌மதே‌தி (செ‌வ்வா‌ய்‌கிழமை) காலை 10 மணியளவில் ராஜபாளையம் ஒன்றியம் சத்திரப்பட்டி மின்சார அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று ஜெயலலிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.