மின்சாரம் தயா‌ரி‌க்க தனியார் நிறுவனங்களுக்கு மானியம் அளிக்க கூடாது: ராமதாஸ்!

ஞாயிறு, 5 அக்டோபர் 2008 (11:58 IST)
ஜெனரேட்டர்கள் மூலம் மின்சக்தியை உற்பத்தி செய்து கொள்ளும் வசதி படைத்த பெரிய தொழில் நிறுவனங்களுக்கு மானியம் அளிக்க கூடாது எ‌ன்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது குறித்தஅவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில். "மாநிலத்தில் உள்ள பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள ஜெனரேட்டர்களை இயக்கி மின்சக்தி தேவையை நிறைவு செய்துகொள்வதற்கு பல்வேறு சலுகைகளை வழங்கப் போவதாக மின்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

மின் பற்றாக்குறை காரணமாக இப்போது பெரிய தொழில் நிறுவனங்களுக்கு மின் அதிக தேவை நேரக் கட்டுப்பாடு என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால், ஜெனரேட்டர்கள் மூலம் மின்சக்தியை உற்பத்தி செய்து கொள்ளும் வசதி படைத்த பெரிய தொழில் நிறுவனங்கள் இந்த கட்டுப்பாடு அமலில் உள்ள நேரத்தில் ஜெனரேட்டர்களை இயக்கி தங்கள் தேவையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். அதுதான் நடைமுறை.

அப்படி இருக்கும்போது, இத்தகைய பெரிய தொழில் நிறுவனங்களுக்கு புதிதாக சலுகைகள் வழங்க வேண்டியதன் அவசியம் என்ன?

இதுவரையில் ரூ.47-க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசல் இனி ரூ.37-க்கு விற்கப்படும்; இந்த வகையில் உற்பத்தியாகும் மின்சக்திக்கு வாட் வரியில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படும்; ஜெனரேட்டர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சக்தி ஒரு யூனிட்டுக்கு ரூ.11 எனக் கணக்கிட்டு அதில் 6 ரூபாய் 40 காசை மாநில அரசு ஏற்றுக் கொள்ளும் என்றும், மீதி 4 ரூபாய் 40 காசை மட்டும் தொழில் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

உற்பத்தி செலவில் 60:40 என்ற விகிதத்தில் பங்கிட்டு கொள்ளும் இந்த ஏற்பாட்டிற்கு பதிலாக 75:25 என்ற விகிதத்தில் செலவை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தொழில் நிறுவனங்கள் வற்புறுத்தி வருகின்றன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. போகிற போக்கைப் பார்த்தால், இதையும் அமைச்சர் ஏற்றுக்கொள்வார் என்றே தெரிகிறது.

ஜெனரேட்டர்களை இயக்கி உற்பத்தியாகும் மின்சக்திக்கான செலவு ஒரு யூனிட்டுக்கு ரூ.11 என்பது எந்த அடிப்படையில் கணக்கிடப்பட்டிருக்கிறது?. ஒரு லிட்டர் டீசல் ரூ.47 என்று விற்கப்படுகிறபோது, கணக்கிடப்பட்டதா?. அல்லது இனி ஒரு லிட்டர் டீசல் ரூ.37- க்கு விற்கப்பட இருக்கிறதே அந்த விலையில் கணக்கிடப்பட்டிருக்கிறதா?

ஜெனரேட்டர்கள் மூலம் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம் என்றால், அது நாள்தோறும் 2 கோடியே 40 லட்சம் யூனிட் மின்சாரத்திற்கு சமம். ஒரு யூனிட்டிற்கு ரூ.11 செலவு என கணக்கிட்டு அரசு மானியம் வழங்கினால் நாள்தோறும் மாநில அரசு, ஆலை அதிபர்களுக்கு மானியமாக அளிக்கப்போகும் தொகை சுமார் ரூ.4 கோடி அளவுக்கு வரும் என்று வல்லுநர்கள் கணக்கிட்டு சொல்கிறார்கள். நாள்தோறும் ரூ.4 கோடி மானியம் என்றால் மாதத்திற்கு ரூ.120 கோடி. ஆண்டிற்கு ரூ.1,440 கோடி மானியம்.

தென்னிந்திய பஞ்சாலை கழகத் தலைவர் தெரிவித்துள்ள கணக்கின்படி பார்த்தால் பல்வேறு சலுகைகளை வழங்கியதற்கு பின்னரும் ஜெனரேட்டர்களை இயக்கி மின்தேவையை நிறைவு செய்து கொள்ளும் தொழில் நிறுவனங்களுக்கான செலவு முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளப் போகிறது என்ற நிலைமை உருவாக இருக்கிறது.

அத்தகைய நிலையில், அரசு அளிக்கும் மானியத்தினால், பெரிய தொழில் நிறுவனங்களுக்கு இலவசமாகவே மின்சாரம் கிடைக்கப்போகிறது என்றுதான் அர்த்தம். இந்த ஆபத்தை தடுத்து நிறுத்த வேண்டும்" எ‌ன்று ராமதாஸ் கூறியுள்ளார்.