திருச்சி, மதுரையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்!

சனி, 4 அக்டோபர் 2008 (11:38 IST)
பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க, திருச்சி, மதுரையில் இருந்து நாளை சென்னைக்கு சிறப்பு ரயி‌ல்களை தெ‌ற்கு ர‌‌யி‌ல்‌வே இய‌க்கு‌கிறது.

இது தொட‌‌ர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, திருச்சியில் இருந்து சென்னைக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (வ.எண். 0653) திருச்சியில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.

அதே போல், சென்னையில் இருந்து திருச்சிக்கு 6ஆ‌ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (0681) எழும்பூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு திருச்சியை சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.

மதுரையில் இருந்து சென்னைக்கு நாளை (5ஆ‌ம் தே‌தி) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (0682) மதுரையில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு எழும்பூரை வந்தடையும். இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (4ஆ‌ம் தே‌தி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது எ‌ன்று தெ‌ற்கு ர‌யி‌ல்வே வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்த‌ி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்