ம.தி.மு.க. போராட்டத்துக்கு அ.இ.அ.தி.மு.க. ஆதரவு!

சனி, 4 அக்டோபர் 2008 (10:57 IST)
இல‌‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்காக ம.‌‌தி.மு.க. சா‌‌ர்‌பி‌ல் அ‌க்டோப‌ர் 10ஆ‌ம் தே‌தி நடைபெறு‌ம் ம‌றிய‌ல் போரா‌ட்ட‌த்து‌க்கு அ.இ.அ.‌தி.மு.க. ஆதரவு தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக ம.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கையில் தமிழ் இனத்தை பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு ரேடார்களும், ஆயுதங்களும் வழங்குவதோடு இந்திய ராணுவத்தின் பொறியியல் பிரிவினரையும் அனுப்பி வைத்து தமிழ் இனத்திற்கு துரோகம் செய்யும் மத்திய அரசைக் கண்டித்து 10ஆ‌ம் தேதி சென்னையில் ம.தி.மு.க. மறியல் அறப்போரை அறிவித்தது.

பொது செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறும் இந்த அறப்போராட்டத்தை அவைத்தலைவர் மு.கண்ணப்பன் தொடங்கி வைக்கிறார்.

இப்போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு அ.இ.அ.தி.மு.க. பொது செயலர் ஜெயலலிதாவுக்கு, வைகோ கடந்த 2ஆ‌ம் தேதி அழைப்புக்கடிதம் அனுப்பி இருந்தார்.

இது தொடர்பாக, ஜெயலலிதா அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் 10ஆ‌ம் தேதி ம.தி.மு.க. நடத்தும் மறியல் போராட்டத்திற்கு ஆதரவாக அ.இ.அ.தி.மு.க. சார்பில் அதன் அமைப்பு செயலர் முத்துசாமி வாழ்த்துரை வழங்குவார் என்று தெரிவித்துள்ளார் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்