மின்வாரிய ஊழியர்களுக்கு 20 ‌விழு‌க்காடு போனஸ்: ஆற்காடு வீராசாமி!

சனி, 4 அக்டோபர் 2008 (10:46 IST)
சென்னை : மின்வாரிய ஊழியர்களுக்கு 20 ‌விழு‌க்காடு போனசும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.1000 கருணைத் தொகையும் வழங்கப்படும் என்று ‌மி‌ன்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிவித்துள்ளார்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில், முதலமைச்சர் கருணாநிதி ஆணையின்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 2007-08ம் ஆண்டிற்கான போனஸ் வழங்குவது குறித்து எரிசக்தித் துறை செயலாளர், மின்சார வாரிய தலைவர், மின்வாரிய செயல் இயக்குநர், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் மின்வாரிய அனைத்து தொழிற்சங்கத் தலைவர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழ்நாடு மின்வாரியத்தின் தற்போதைய நிதிநிலையினை கருத்தில் கொண்டு 2007-08ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஊழியர்களுக்கு 20 ‌‌விழு‌க்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை (போனஸ் 8.33 ‌விழு‌க்காடு, கருணைத் தொகை 11.67‌ ‌விழு‌க்காடு) வழங்குவது என முதலமைச்சர் ஒப்புதலுடன் அறிவிக்கப்படுகிறது.

இதனால் 69,556 ஊழியர்கள் பயனடைவார்கள். மேலும், 2007-08ம் ஆண்டில் மின்வாரியத்தில் பணியாற்றிய சுமார் 14,760 ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் 5,627 பகுதி நேர ஊழியர்களுக்கும் தலா ரூ.1000 கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இதனால் மின்வாரியத்திற்கு இவ்வாண்டு ரூ.60 கோடியே 47 லட்சம் செலவாகும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.