பெருந்துறையில் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா தூண்டுதல்பேரில் ஆள்கடத்தல் நடைபெற்றதாக கூறப்படும் வழக்கு குறித்து குற்றவாளிகளை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி.யினர் அயல்மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர்.
பெருந்துறையை சேர்ந்த பழனிச்சாமி (60), அவரது குடும்பத்தினரை கடத்தியது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி.யினர் விசாரித்து வருகின்றனர்.
தற்போது இந்த வழக்கில் தி.மு.க. பிரமுகர்கள் கோபிநாத், பாலாஜி, ரங்கசாமி, டிப்பர் உரிமையாளர் சந்திரசேகர், பத்திர எழுத்தர் கருணாகரன், நாகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மாவட்ட தி.மு.க. துணை செயலர் விஸ்வநாதன், ஒன்றிய செயலர் சாமி, காஞ்சிகோவில் சின்னப்பன், பெருந்துறை சம்பத்குமார், சார் பதிவாளர் அன்பழகன் உள்ளிட்ட பதினைந்து பேரை சி.பி.சி.ஐ.டி.யினர் தேடி வருகின்றனர்.