இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இன்று காலை 11.30 மணியளவில் அவரை நான் பார்க்க அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன்.
அவைத்தலைவர் பண்ருட்டி ராமசந்திரன், தலைமை நிலைய செயலர் பார்த்த சாரதி, தேர்தல் பிரிவு செயலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள் சிலர் என்னுடன் வந்தார்கள்.
அப்பல்லோ மருத்துவமனையின் வாசலிலேயே என்னுடன் வந்தவர்களை மருத்துவமனைக்கு உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. வேண்டுமானால் என்னை மட்டும் அனுமதிப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. என்னுடன் வந்தவர்களை அனுமதிக்க முடியாது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தடுத்தது ஏன் என்று எனக்கு புரியவில்லை.
கருணாநிதி பார்த்த செய்தி புகைப்படத்தோடு பத்திரிகையில் வந்துள்ளது. எனினும் நீண்ட நேரம் நான் வாதாடியும் கூட அனுமதி தரவில்லை. தமிழ்நாட்டில் இப்படி ஒரு விசித்திரமான மருத்துவமனை இருப்பது எனக்கு இப்பொழுதுதான் தெரிகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பெரியவர் என்.வரதராஜன் விரைவில் குணம் அடைய எனது வாழ்த்துக்களை தெரிவித் துக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.