மணல் திருட்டை க‌ண்டி‌த்து திரு‌ப்புவனத்‌தி‌ல் நாளை ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா!

வெள்ளி, 3 அக்டோபர் 2008 (15:55 IST)
சிவ‌க‌ங்கை மாவ‌ட்ட‌த்‌தி‌ற்கு உ‌ட்ப‌ட்ட ஆ‌ற்று‌ப் படுகை‌க‌ளி‌ல் அனும‌‌தி‌யி‌ன்‌றி மண‌ல் எடு‌க்க‌ப்ப‌ட்டு வருவதை க‌ண்டி‌த்து அ.இ.அ.தி.மு.க. சா‌ர்‌பி‌ல் ‌திரு‌ப்புவனத்‌தி‌ல் நாளை ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌ம்'' எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலர் ஜெயலலிதா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட 33 கிலோ மீட்டர் நீளமுள்ள வைகை ஆற்று மற்றும் அதன் கிளை ஆறுகளான மணிமுத்தாறு, தேனாறு, பாலாறு ஆகிய ஆற்றுப் படுகைகளில் அனுமதியின்றி 29 இடங்களில் மணல் எடுக்கப்பட்டு வருவதால் திருப்புவனத்திற்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோடு மட்டும் அல்லாமல் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதை கண்டித்தும் திருப்புவனம், ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாமலும், பேருந்துகளை இயக்காமலும் இருப்பதைக் கண்டித்தும், காலி இடங்களையும் அரசு புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்ற தி.மு.க. வினரை தட்டிக் கேட்காத திருப்புவனம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் சிவகங்கை மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை காலை 10 மணி அளவில் சிவங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சி வாரச்சந்தை எம்.ஜி.ஆர். திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இதை அ.இ.அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலும், சிவகங்கை மாவட்ட அ.இ.அ.தி.மு.க. செயலர் சோழன், பழனிச்சாமி முன்னிலையிலும் நடைபெறும்'' எ‌ன்று ஜெயல‌லிதா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.