உய‌ர் ம‌ட்ட குழு‌வினருட‌ன் அமைச்சர் ம‌திவாண‌ன் கல‌ந்தா‌ய்வு!

செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (15:11 IST)
ஆவின் இணையம், மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியமமற்றும் கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்களின் நலனுக்காக தமிழ்நாடு கூட்டுறவு சட்டத்தின்படி சிறப்பு துணைவிதிகள் ஏற்படுத்துவது சம்பந்தமாக அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவுடன், தலைமை செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் இன்று கலந்தாய்வு நடத்தினார்.

இது சம்பந்தமாக அமைச்சர் மதிவாணன் தெரிவிக்கும் போது, இணைய ஊழியர்களின் நலனுக்காக சிறப்பு துணைவிதிகள் ஏற்படுத்தப்பட்டு அதன் அடிப்படையில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட பணி உயர்வு, தற்போது ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரு‌கிறது.

இது போன்று தமிழ்நாட்டில் உள்ள 17 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள், ஒன்றியங்கள் மற்றும் கிராம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களை கருத்தில் கொண்டு சிறப்பு துணை விதிகள் ஏற்படுத்த உயர்மட்ட‌க்குழு பணிக்கப்பட்டுள்ளது.

இ‌ந்உயர்மட்ட குழுவின் பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டு, உயர்மட்ட குழுவிடம் பணிகளை விரைந்து முடிக்க கே‌ட்டு‌க்கொ‌ள்ள‌ப்ப‌ட்டது எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்