அஞ்சலகங்கள் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.35 கோடி கடனுதவி!

திங்கள், 29 செப்டம்பர் 2008 (19:41 IST)
தமிழகத்தில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அஞ்சலகங்கள் மூலம் ரூ.1.35 கோடி கடனுதவி மக‌ளி‌ர் சுய உதவிக் குழுக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐந்து மாவட்டங்களில் சுமார் 2,900 சுயஉதவிக்குழுக்கள் அஞ்சலகங்களின் கடனுதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்பது அஞ்சலக வட்டாரங்களில் உள்ள 2,000 அஞ்சலகங்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளன.

அஞ்சலகங்கள் வழங்கும் கடனுக்கு ஒன்பது விழுக்காடு வட்டி வசூலிக்கப்படுகிறது. இதில் இந்திய அஞ்சல்துறைக்கு 3 விழுக்காடும், நபார்டு வங்கிக்கு 6 விழுக்காடும் பங்கு உள்ளது.

இத்திட்டம் அஞ்சல்துறை வழங்கும் நிதி மற்றும் காப்பீட்டு சேவைகளை சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வாயிலாக விற்பனை செய்யவும் உதவுகிறது.

அஞ்சலகங்கள் மூலம் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி அளிக்கும் இ‌த்திட்டம் பீகார், குஜராத், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒரிசா, உத்தரப் பிரதேசம், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவைகளுக்கு விரிவுப்படுத்த இந்திய அஞ்சல்துறை திட்டமிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்