ராமே‌ஸ்வர‌த்‌தி‌ல் ‌மீனவ‌ர்‌க‌ள் வேலை ‌நிறு‌த்த‌ம்!

திங்கள், 29 செப்டம்பர் 2008 (12:35 IST)
த‌மிழக ‌மீனவ‌ர்க‌‌ள் ‌‌மீது க‌ண்மூடி‌த்தனமாக தா‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌ம் ‌சி‌றில‌ங்க கட‌ற்படையை க‌ண்டி‌த்து‌ம், ம‌த்‌திய- மா‌நில அரசுக‌ள்‌ உடனடியாக இ‌ப்‌பிர‌ச்சனை‌யி‌‌ல் தலை‌யி‌ட்டு நடவடி‌க்கை எடு‌க்க‌க் கோ‌ரியு‌ம் ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌‌ர்க‌ள் இ‌ன்று வேலை ‌நிறு‌த்த‌ப் போரா‌ட்ட‌த்த‌ி‌ல் ஈடுப‌‌ட்டு‌ள்ளன‌ர்.

ராமே‌‌ஸ்வரம் அருகே நடுக்கடலில் நே‌ற்று மீன் பிடித்துக் கொண்டிரு‌ந்த மதுரையை சேர்ந்த மீனவர் முருகன், ‌சி‌றில‌ங்க கட‌ற்படை‌யினரா‌ல் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர். அவருட‌ன் செ‌ன்ற ம‌ற்ற மீனவர்கள் கட‌லி‌ல் கு‌தி‌த்து உயிர் தப்பினர். இந்த ‌நிக‌ழ்வா‌ல் ராமே‌ஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பு‌ம் பத‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌‌ட்டு‌ள்ளது.

இந்த ‌நி‌க‌ழ்வு‌க்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மீனவர் சங்கங்கள் இ‌‌ன்று வேலை ‌நிறு‌த்த‌‌த்த‌ி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌. ராமே‌‌ஸ்வரத்தில் இருந்து தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்குள் சென்றுவரும்.

இ‌ந்த வேலை ‌நிறு‌த்த‌த்தா‌ல் படகுகள் அனைத்தும் கரையில் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன. மீன்பிடி தொழிலை நம்பி இருந்த ஐஸ் ‌நிறுவன‌ங்க‌ள், லேத் பட்டறைகள் அனைத்தும் மூடப்பட்டு ‌வி‌‌ட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமே‌ஸ்வரம் கடற்கரை இழந்து காணப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்