காமதேனு கல்லூரியில் பட்டமளிப்பு விழா!

திங்கள், 29 செப்டம்பர் 2008 (12:12 IST)
ஈரோடு: சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அத்தாணி சாலை‌யி‌லஉள்ளது காமதேனு கலை அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியில் நான்காம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடந்தது.

webdunia photoWD
விழாவிற்கு வந்த அனைவரையும் கல்லூ‌ரி முதல்வர் பேராசிரியர் வி.சிவானந்தம் வரவேற்றார். கல்லூரி தாளாளரும் காமதேனு குழுமங்களின் தலைவருமான ஆர்.பெருமாள்சாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலர் ஜானகி பெருமாள்சாமி முறைப்படி பட்டமளிப்பு விழாவை தொடங்கி வைத்தார்.

அதன்பின் சத்தியமங்கலம் ச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ரஎல்.பி.தர்மலிங்கம் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, மாணவ- மாணவியர்களின் வாழ்க்கையில் பட்டம் பெறும் நாள் பொன்னாள். கடந்த காலங்களில் கல்லூரியில் பயில ஈரோடு, கோபி, கோயமுத்தூர் போன்ற பெரிய நகர் பகுதிகளுக்குத்தான் செல்லவேண்டும்.

ஆனால் தற்போது கிராம பகுதிகளில் கல்லூரிகள் தொடங்கி நம் பகுதியிலேயே பயின்று இங்கேயே பட்டம் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பட்டபடிப்பிற்கும் தொழிலுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்றும் பி.ஏ., படித்த சத்தியமங்கலம் மாணவர் இன்று ஆ‌‌ஸ்‌ட்ரேலியாவில் மிகப்பெரிய பதவியில் இருப்பதாக கூறினார்.

பின்னர் 130 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் பட்டங்களை பெற்றனர். விழாவில் தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.