‌விலைவா‌சி உய‌ர்‌வை‌க் க‌‌ண்டி‌த்து சேல‌த்‌தி‌ல் நாளை ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா!

திங்கள், 29 செப்டம்பர் 2008 (11:04 IST)
விலைவாசி உயர்வு, ‌மி‌ன்வெ‌ட்டை‌க் கண்டித்து‌ சேலத்தில் நாளை அ.இ.அ‌.‌தி.மு.க. சா‌‌ர்‌‌பி‌ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன் பொது‌ச் செயல‌‌ர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது கு‌றி‌த்து அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலம் மாநகரில் இதுவரை கண்டிராத வகையில் மின்வெட்டு நிலவுகிறது. இதன் விளைவாக அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டதன் காரணமாகவும், பெட்ரோலிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாகவும், எரிவாயு விலையேற்றம் காரணமாகவும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.

கடுமையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்திய, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தெரியாத, பெட்ரோலியப் பொருட்களை மக்களுக்குத் தங்கு தடையின்றி வழங்காத, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சேலம் மாநகர் அ.இ.அ‌.‌தி.மு.க. சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில், சேலம் மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" எ‌ன்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்