வடிவேலு மீதான வழக்கை விரைந்து முடிக்க விஜயகாந்த் மேலாள‌ர் மனு!

வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (16:51 IST)
நகை‌க்சுவை நடிக‌ர் வடிவேலு, தே.மு.‌தி.க. தொ‌‌ண்ட‌ர்க‌ள் மோ‌தி‌க் கொ‌ண்ட வழ‌க்‌கி‌ல், கட‌ந்த ஓரா‌ண்டா‌கியு‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் எ‌ந்த‌வித நடவடி‌க்கையு‌ம் எடு‌க்க‌வி‌ல்லை எ‌ன்று‌ம் இ‌ந்த வழ‌க்கை ‌விரை‌ந்து ‌விசா‌ரி‌த்து அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்யுமாறு கா‌வ‌ல்துறை‌யினரு‌க்கு உ‌த்தர‌விட வே‌ண்டு‌ம் எ‌‌ன்று‌ம் ‌விஜயகா‌ந்‌தி‌ன் மேலாள‌ர், செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளா‌ர்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மேலாள‌ர் சதீஷ்குமார், செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தாக்கல் செய்துள்ள மனுவில், விஜயகாந்தின் உறவினரும், முன்னாள் அரசு வழ‌க்க‌றிஞருமான முத்துராம் கடந்த 13.9.2007 அன்று மரணம் அடைந்தார். அப்போது தே.மு.தி.க. தொண்டர்கள் சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அதிக அளவில் கூடினார்கள்.

அதே தெருவில் குடியிருக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேலு அந்த வழியாக வந்தார். குடிபோதையில் வந்த அவருக்கும், எங்களுக்கும் தகராறு ஏற்பட்டது. 20 பேருடன் வந்த அவர் என்னையும், தே.மு.தி.க. தொண்டர்கள் சிலரையும் தாக்கினார்கள். இது தொடர்பாக நான் கொடுத்த புகாரில் வடிவேலு மீது வழ‌க்கு‌ப் பதிவு செய்யப்பட்டது.

ஆனால் கடந்த ஓரா‌ண்டா‌கியு‌ம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வடிவேலு மீதான வழக்கை விரைந்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவ‌‌ல்துறை‌யினரு‌க்கு உத்தர விடவேண்டும் எ‌ன்று மனுவில் கூறப்பட்டு‌ள்ளது.

இ‌ந்த மனு செ‌ப்ட‌ம்ப‌ர் 29ஆ‌ம் தே‌தி‌க்கு விசாரணைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்