ஈரோட்டில் வேலைகேட்டு வனத்துறை அலுவலகம் முற்றுகை!

வியாழன், 25 செப்டம்பர் 2008 (10:50 IST)
வனத்துறையில் ஓய்வு பெற்றவர்களின் வாரிசுகளுக்கு வேலை கொடுக்க வேண்டும் எ‌ன்ற கோரிக்கை வைத்து வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

வனத்துறையில் வனவர், வனக்காப்பாளர் உள்ளிட்ட பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக வேலை வழங்கவேண்டும் என பத்து ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை அரசாங்கம் நிறைவேற்றவில்லை.

இதனை உடனடியாக ‌‌நிறைவே‌ற்ற‌க் கோ‌ரி ஈரோடு மாவட்ட வன அலுவலகத்தை வன‌‌த்துறை‌யி‌ல் ஓ‌‌ய்வு பெ‌ற்ற வா‌ரிசுதார‌ர்க‌ள் முற்றுகையிட்டனர்.

தி.மு.க. அரசு பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வாணயம் மூலம் நிரப்பி வருகிறது. வனத்துறை‌யி‌ல் கா‌லியாக உ‌ள்ள பணியிடங்கள் நிரப்ப‌ப்படாம‌ல் உள்ளது. இதில் ஓய்வுபெற்ற வனத்துறையின‌ரி‌ன் வாரிசுகளை நியமிக்க வேண்டும் என்று அவ‌ர்க‌ள் கோ‌ரி‌க்கை வை‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்