த‌மிழக‌த்த‌ி‌ல் வ‌ங்‌கி‌ப் ப‌‌ணிக‌ள் பா‌தி‌ப்பு!

புதன், 24 செப்டம்பர் 2008 (18:02 IST)
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது, வங்கிகளை இணைக்க கூடாது, அய‌ல்நாட்டு முதலீட்டை வங்கிகளில் அனுமதிக்க கூடாது என்பது உள்ளிட்ட ப‌ல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவது‌ம் வ‌ங்‌கி ஊ‌‌‌‌‌‌ழிய‌ர்க‌ள் இ‌ன்று வேலை ‌நிறு‌த்த‌ப் போராட்டம் நட‌த்‌தின‌ர். த‌மிழக‌த்‌தி‌ல் வ‌‌ங்‌கி‌ப் ப‌ணிக‌ள், ஏ.டி.எ‌ம். சேவைக‌ள் பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டது.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று வ‌ங்‌கி ஊ‌ழிய‌ர்க‌ள் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மன்றோ சிலையில் இருந்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வரை நடைபெற்ற ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்பாளர் சி.எச்.வெங்கடாசலம் தலைமையில் ஊர்வலம் நடந்தது. அப்போது, கோஷங்கள் எழுப்பியவாறு ஊ‌ழிய‌ர்க‌ளசென்றனர். செ‌ன்னை பாரிமுனை ஸ்டேட் வங்கி முன்பு ஊ‌ழிய‌ர்க‌ள் ஆர்ப்பாட்டம் செ‌ய்தன‌ர்.

இ‌ந்த வேலை ‌நிறு‌த்த‌ம் கு‌றி‌த்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்பாளர் சி.எச்.வெங்கடாச்சலம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''நாடு முழுவதும் மொத்தம் 10 லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 62 ஆயிரம் பேர் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டுள்ளனர்'' என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்