அனை‌த்து அரசு ஊ‌ழிய‌ர்களு‌க்கு‌ம் போனஸ்: கருணாநிதி!

புதன், 24 செப்டம்பர் 2008 (16:07 IST)
''அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ரூபாய் பத்தாயிரத்துக்கும் அதிகமாக மாத ஊதியம் பெறும் 'சி', 'டி' வகை பணியாளர்கள் அனைவருக்கும் விதிகளை தளர்த்தி வருமான உச்சவரம்பின்றி சென்ற ஆண்டு வழங்கப்பட்டதைப் போலவே இந்த ஆண்டும் போனஸ், கருணைத்தொகை வழங்கப்படும்'' எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இததொட‌ர்பாஅவ‌ர் இ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், ஒவ்வொரு ஆண்டும் அரசு பொதுத் துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பண்டிகை காலத்தின்போது போனஸ் சட்டத்தின் கீழ் சட்ட ரீதியாக வழங்கப்பட வேண்டிய போனஸ் தொகை மற்றும் கருணைத் தொகை ஆகியன வழங்கப்பட்டு வருகின்றன.

லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் போனஸ் சட்டப்படி அளிக்க வேண்டிய போனஸ் தொகையை 30.9.2008 க்குள் அளித்தால்தான், தமது வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்யும் போது இச்செலவினத்தை சேர்க்க இயலும் என மைய அரசு வருமான வரிச் சட்டத்தைத் திருத்தியுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் 30.9.2008க்குள், போனஸ் சட்டப்படி ரூபாய் 10,000க்கு மிகாமல் மாத ஊதியம் பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் அளிக்கவேண்டிய போனஸ் தொகையை வழங்கலாம் என அரசு ஆணையிட்டுள்ளது.

இவர்கள் தவிர அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ரூபாய் பத்தாயிரத்துக்கும் அதிகமாக மாத ஊதியம் பெறும் "சி'' மற்றும் "டி'' வகை பணியாளர்கள் அனைவருக்கும் விதிகளை தளர்த்தி வருமான உச்சவரம்பின்றி சென்ற ஆண்டு வழங்கப்பட்டதைப் போலவே இந்த ஆண்டும் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.

கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் தொழிற்சங்கங்களைக் கலந்தாலோசித்து போனஸ், கருணைத் தொகை குறித்த அறிவிப்புகளை வெளியிட வழிவகுக்கப்படும். சென்ற ஆட்சிக் காலத்தின்போது முதல் நான்கு ஆண்டுகளில் போனஸ் தொகை மட்டுமே வழங்கப்பட்டது. கருணைத் தொகை வழங்கப்படவில்லை.

2005- 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அந்த ஆண்டில் மட்டும் கருணைத் தொகை வழங்கப்பட்டது. இந்த அரசு பொறுப்பேற்றது முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு போனஸ் தொகை மற்றும் கருணைத் தொகை தவறாமல் வழங்கப்பட்டு வருகிறது. அரசு அலுவலர்கள், பொதுத்துறை பணியாளர்களின் நலன் காப்பதில் நமது நாட்டிற்கே முன்னோடியாகத் திகழும் இந்த அரசு, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் தொடர்ந்து வழங்கும்.

எனவே அரசியல் மாற்றம், தேர்தல் கூட்டணி மாற்றம் என்ற நிலையில் அல்லாமல், அரசு அலுவலர், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கை பிரச்சினையாக இதனை அணுகிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்'' எ‌ன்றமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.