எடியூர‌ப்பா அரசை கலை‌க்கவே ச‌ர்‌ச்சுக‌ள் ‌மீது தா‌க்குத‌‌ல்: ராமகோபாலன்!

புதன், 24 செப்டம்பர் 2008 (12:08 IST)
''பா.ஜ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு தேவகவுடாவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டு சேர்ந்து கலவரங்களை உண்டாக்கி, சட்டம்- ஒழுங்கை சீர்குலையச் செய்யவே தேவாலய‌ங்க‌‌ள் ‌மீது தாக்குத‌ல் நட‌த்தப்படு‌கிறது'' என்று இ‌ந்து மு‌ன்ன‌ணி மா‌நில ‌நிறுவன அமை‌ப்பாள‌ர் ராமகோபாலன் கு‌ற்ற‌ம்சா‌ற்‌‌‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌‌யி‌ல், கர்நாடக முதலமை‌ச்ச‌ர் எடியூரப்பா, கர்நாடகா - பெங்களூர் ஆர்ச் பிஷப்பை அவரது வீட்டில் சென்று சந்தித்து இருக்கிறார். ஆனால், ஆர்ச் பிஷப், எடியூரப்பாவை வரவேற்காமல் தன்னுடைய வீட்டு வாசலிலேயே நிற்க வைத்து நாங்கள் புண்படுத்திவிட்டதாக ஆவேசப்பட்டு பேட்டியளித்திருக்கிறார். இந்த செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

முதலமை‌ச்ச‌ர் எடியூரப்பா, ஆர்ச் பிஷப் வீட்டிற்கு போயிருக்க கூடாது. நமது நாட்டில் எந்த முதல்வரும் செய்யாத ஒரு நல்ல முன் உதாரணத்தை கர்நாடக முதலமை‌ச்ச‌ர் செய்யப்போய் அவமதிக்கப்பட்டுள்ளதைக் கண்டு ஏராளமானவர்கள் வருந்தியுள்ளார்கள்.

பா.ஜ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு தேவகவுடாவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டு சேர்ந்து கலவரங்களை உண்டாக்கி, சட்டம்- ஒழுங்கை சீர் குலையச் செய்ய தேவாலய‌ங்க‌ளை தாக்கியிருக்க கூடும். தேவாலய‌ங்க‌ள் உடைப்பு ‌நிக‌ழ்வுகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்பும் அரசு, ஒரிசா லட்சுமணானந்தா கொலை ‌நிக‌ழ்‌வி‌ன் போதும், இந்துக்கள் பாதிக்கப்பட்டபோதும் குழுவை அனுப்பாதது ஏன்?

தேவாலய‌ங்களை தாக்குபவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்கப்போவதாக அறிவித்த அரசு, கோ‌யில்களை தாக்குபவர்களையும் குண்டர் சட்டத்தில் அடைக்கப் போவதாக அறிவிக்க வேண்டும். மோசடி மதமாற்றமும், இந்து தெய்வங்களை இழிவுபடுத்தி நடத்தப்படும் பிரசாரங்களும் தான் பிரச்சினைக்கு காரணம் என்பது உலகறிந்த உண்மை. இதை ஆர்ச் பிஷப் நிறுத்தினால் அமைதி திரும்பும்.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்து மனப்பான்மையுடன் நடக்க வேண்டாம் என்றும், கலவரங்களில் குளிர்காய வேண்டாம் என்று‌ம் ராமகோபால‌ன் கே‌ட்டு‌க்கொ‌‌ண்டு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்