வடிவேலை து‌‌ன்ப‌ப்படு‌த்துவது வரு‌த்த‌ம் அ‌ளி‌க்‌கிறது: சரத்குமார்!

செவ்வாய், 23 செப்டம்பர் 2008 (11:27 IST)
விலைவாசி உயர்வு, மின்தட்டுப்பாடு உ‌ள்‌‌ளி‌ட்ட ப‌ல்வேறு ‌பிர‌ச்சனைக‌ளி‌ல் அவதிப்படும் தமிழக மக்களை கவலை மறந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை மருந்தாக விளங்கும் வடிவேலுவை, துன்பத்துக்கு உள்ளாக்குவதும், துயரப்படுத்துவதும் வருந்தத்தக்கது'' எ‌ன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவ‌ர் சரத்குமார் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதகு‌றி‌த்தஅவ‌ரவெளியிட்டுள்ள அறிக்கையில்,"பொதுமக்களால் கூர்ந்து கவனிக்கப்படும் பொறுப்பான நிலையில் உள்ள கலைஞர்கள் இருவர் மோதிக்கொள்வது கவலைக்குரியது. விலைவாசி உயர்வு, மின்தட்டுப்பாடு, டீசல் தட்டுப்பாடு, விவசாயிகளுக்கு உரத்தட்டுப்பாடு என பல நிலையிலும் அவதிப்படும் தமிழக மக்களை கவலை மறந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை மருந்தாக விளங்கும் நண்பர் வடிவேலுவை, பொதுவாக கலைஞர்களை, துன்பத்துக்கு உள்ளாக்குவதும், துயரப்படுத்துவதும் வருந்தத்தக்கது. இதனை யார் செய்திருந்தாலும் அது தவறுதான்.

தன்னை பின்பற்றும் ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் அகிம்சை வழியை போதிப்பது ஒரு தலைவனின் கடமை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

உணர்ச்சியை தூண்டும் விதமாக 'சுட்டுத்தள்ள வேண்டும்' என்று சூளுரைக்காமல் இருப்பது, ஒவ்வொருவரின் சமூகக் கடைமை என்பதை உணர்ந்தாக வேண்டும். இதுவே நல்ல அரசியலை விரும்பும் மக்களின் விருப்பமாகும்.

ஒரு சக கலைஞரின் மேடையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட போதும், மற்றொரு கலைஞனின் வீடு அடித்து நொறுக்கப்பட்ட அவலம் நிகழும் போதும், முதலில் ஓடிச்சென்று சக நடிகர் என்ற முறையில் ஆறுதல் கூறுவதும், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க ஒழுக்க நடவடிக்கைகளுக்கு உத்தரவிடுவதும் மட்டுமே நாடு விரும்பும் ஒரு நல்ல மாற்றத்தின் அறிகுறியாக இருக்க முடியுமே தவிர, ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஒரு அரசியல் சாயம்பூசி அனுதாபம் தேட முயற்சிப்பதோ, பிறர்மீது பழியை போடுவதோ தீர்வாகிவிட முடியாது.

அனைத்தையும் மக்கள் ஆழ்ந்து கவனித்து வருகிறார்கள் என்பது மட்டும் நிச்சயம். மக்களை மகிழ்விக்கும் கலைஞர்களின் பரஸ்பர சண்டையை பார்த்து ஒரு போதும் மக்கள் மகிழமாட்டார்கள் என்பது உண்மை" எ‌ன்றசரத்குமார் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்