ஈரோடு அருகே ஆசிரியர் மாற்றத்தை கண்டித்து பெற்றோர்கள் பள்ளிக்கூடத்தை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ளது புதுப்பாளையம். இங்கு அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒரு ஆசிரியை மட்டும் பணியாற்றி வந்தார். தற்போது அந்த ஆசிரியையும் கலந்தாய்வு மூலம் ஈரோட்டிற்கு பணி மாறுதல் பெற்று சென்றுவிட்டார்.
இந்த நிலையில் குமாரபாளையத்தில் உள்ள பள்ளியில் இருந்து பதினைந்து நாட்களுக்கு ஒரு ஆசிரியர் புதுப்பாளையம் பள்ளிக்கு அனுப்புவது என்று கல்வி துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமாரபாளையம் பள்ளி பெற்றோர்கள் திடீரென ஒன்றுகூட தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கும் என்று பள்ளியை பூட்டி போராட்டம் செய்தனர். இது குறித்து கல்வி அதிகாரிகள் மாற்று ஆலோசனை செய்து வருகின்றனர்.