ஈரோடு அருகே வீடுகளுக்குள் லாரி புகுந்து 9 பேர் பலி!

ஞாயிறு, 21 செப்டம்பர் 2008 (11:54 IST)
ஈரோடமாவ‌ட்ட‌மகொடுமுடி‌யி‌லவேகமாவ‌ந்ல‌ா‌ரி ‌‌நிலைதடுமா‌றி வீடுகளு‌க்கு‌ளபுகு‌ந்த‌தி‌ல், ‌வீ‌ட்டி‌லதூ‌ங்‌கி‌க்கொ‌‌ண்டிரு‌ந்த 2 குழ‌ந்தைக‌ள் 3 பெ‌ண்க‌ளஉ‌ள்பட 9 பே‌ரஉட‌லநசு‌ங்‌கி ப‌லியானா‌ர்க‌ள்.

மேட்டூரில் இருந்து கரிமணல் ஏற்றிக் கொண்டு வேகமாவ‌ந்ல‌ா‌ரி காசிபாளையம் பகுதியில் வந்த போது திடீரென நிலைதடுமாறி அ‌ங்கு‌ள்ஒரவீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தவ‌ர்க‌ளமீது மோதியது.

இதைத்தொடர்ந்து, அருகில் இருந்த ஒரு வீட்டுக்குள் புகுந்த ல‌ா‌‌ரி அடுத்தடுத்த வீடுக‌ளிலு‌ம் புகுந்து கடை‌‌சியாக ஒரு மின்கம்பத்தில் மோதி நின்றது. இ‌‌தி‌ல் ‌வீ‌ட்டி‌ல் தூ‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌ந்த 2 குழ‌ந்தைக‌ள் 3 பெ‌ண்க‌ள் உ‌‌‌ள்பட 9 பே‌ர் உட‌ல் நசு‌ங்‌கி ப‌லியானா‌ர்க‌ள்.

இதையடு‌த்து, காவ‌ல் து‌றை‌யின‌ர் ‌அ‌ந்த இடத்துக்கு விரைந்து சென்று வீட்டின் இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் உடல்களை மீ‌ட்டன‌ர். மே‌லு‌ம் படுகாயமடை‌ந்தவ‌ர்க‌ள் அரு‌கிலு‌ள்ள மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்‌ப‌ட்டன‌ர். இ‌‌ந்‌நிக‌ழ்வு அ‌ப்பகு‌தி‌யி‌ல் பெரு‌ம் சோக‌த்தை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்