சென்னை: ''ஈழத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சிறிலங்க ராணுவத்தை கண்டித்து காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சிறிலங்க அரசை வன்மையாக கண்டிப்பதுடன், உடனடியாக இந்த தாக்குதலை சிறிலங்க அரசு நிறுத்த வேண்டும் என்று தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக உள்ள இந்த பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக சுமூக தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள அவர், சிறிலங்க ராணுவத்துக்கு மத்திய அரசு ஆயுத உதவிகள் செய்யக் கூடாது என்று தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.