சென்னையில் தோல் வளர்ச்சிப் பூங்கா: அமைச்சர் தகவல்!

வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (11:19 IST)
சென்னையில் ஒருங்கிணைந்த தோல் வளர்ச்சிப் பூங்கா, காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் விரைவில் அமைக்கப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் மின்சக்தித் துறை இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவி‌த்து‌ள்ளா‌ர்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பூங்காவை அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கிவிட்டதாகவும் இது அடுத்த 2 ஆண்டுகளுக்குள் செயல்படத் துவங்குமென்றும் கூறினார்.

ஒருங்கிணைந்த தோல் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை, கொல்கத்தா, ஆந்திரா, கான்பூர், நெல்லூர் ஆகிய 5 இடங்களில் ஒருங்கிணைந்த தோல் வளர்ச்சிப் பூங்காக்கள் ரூ.300 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன.

மேலும், ரூ.300 கோடி செலவில் சென்னை, கொல்கத்தா, ரோட்டக் ஆகிய நகரங்களில் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் அமைய உள்ளன.

காலணி தொழில் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டில் தோல் துறையில் இதன் பங்கு 35 ‌விழு‌க்காடாகு‌ம். இந்த ஆண்டு அது 42 ‌விழு‌க்காடாஅதிகரித்துள்ளது. 2011ஆ‌ம் ஆண்டில் 60 ‌விழு‌க்கா‌ட்டஎட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த தோல் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்‌தி‌ன் ‌கீ‌ழதொழிலாளர் நலனுக்காகவும், தொழில் பயிற்சி மற்றும் பாதுகாப்புக்காகவும் ரூ.100 கோடி, செலவிடப்படுமஎ‌ன்றஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்