கருணாநிதி அரசின் பட்டியல் சாதனைகள் அல்ல வேதனைகள்: ராமதாஸ்!

முதலமை‌ச்ச‌‌ர் கருணாநிதி, தனது ஆட்சியில் சாதித்துள்ளதாக போடப்பட்டு பத்திரிகைகளில் வெளிவந்துள்ள பட்டியல்கள் சாதனைகள் அல்ல, வேதனைகள் எ‌ன்று‌ம் ஒரு ரூபா‌ய் அ‌ரி‌சி ‌தி‌ட்ட‌ம், 50 ரூபா‌ய்‌க்கு ம‌ளிகை ‌தி‌ட்ட‌ம் ஆ‌கியவை மோசடி‌த் ‌தி‌ட்‌ட‌ங்க‌ள் எ‌ன்று‌ம் ா.ம.க நிறுவனர் ராமதாஸ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌‌ர்.

webdunia photoFILE
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், தமிழக அரசின் சாதனைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கெனவே பாதியில் கைவிடப்பட்ட திட்டங்கள், தோல்வி அடைந்த திட்டங்கள் ஆகியவற்றை எல்லாம் போட்டு தமிழக அரசின் சாதனைகள் என்று பட்டியல் வெளியிட்டுள்ளனர். இவர்கள் வெளியிட்டுள்ள பட்டியல்கள் சாதனை அல்ல, வேதனை‌ப் ப‌ட்டிய‌‌ல்.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம், 50 ரூபாய்க்கு ‌நியாய‌விலை‌க் கடைக‌ளி‌ல் மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் குறித்து பாராட்டப்பட்டு உள்ளது. 67 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை 50 ரூபாய்க்கு கொடுக்கும் திட்டம். 3 விரல்களால் கிள்ளி எடுத்தாலே இந்த பொருட்களின் எடை வந்துவிடும். எடையே போட தேவையில்லை. மக்களை ஏமாற்ற வேண்டும், அவர்களின் ஆதரவை பெற வேண்டும் என்பதற்காக அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. 75 கிராம் கடலைபருப்பு எதற்கு பயன்படும். இந்த திட்டத்திற்கு பதில் வேறு உருப்படியான திட்டத்தை செயல்படுத்துங்கள்.

தமிழகத்தில் உள்ள 8000 டாஸ்மார்க் கடைகளை மூடிவிட்டு அனைத்தையும் நியாயவிலைக் கடைகளாக மாற்ற வேண்டும். ஏற்கெனவே உள்ள நியாயவிலைக் கடைகளில் வழக்கமாக வழங்கும் பொருள்களை வழங்க வேண்டும். இந்த புதிய நியாயவிலைக் கடைகளில் மளிகை பொருள்கள், காய்கறிகள் ஆகியவற்றை அரசே விற்பனை செய்ய வேண்டும். இதன் மூலம்தான் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும்.

சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்து நடைபெறுகிறது. சகிப்புத்தன்மையற்ற மதவாத சக்திகள் மதவாதத்தை தூண்டிவிட்டு ஆதாயம் பெறவேண்டும் என குறுகிய அரசியல் நடத்துவதற்காக சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்துவதும் ஒரு பயங்கரவாதம் தான். இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி யார் எந்த மதத்தை பின்பற்றவும், மதப் பிரசாரம் செய்யவும் அவர்களுக்கு உரிமை உள்ளது. மக்களின் மத உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட நினைப்பதையும், சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்துவதையும் நாகரிக சமுதாயம் ஏற்காது எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றினா‌ர்.